முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 23 March 2022 2:02 AM IST (Updated: 23 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி(85). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். நோயின் தாக்கம் அதிகரித்ததால் மனம் உடைந்த முத்துசாமி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முத்துசாமி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story