ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
திருப்பனந்தாள் அருகே மளிகை கடையில் இருந்த ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. தொழில் போட்டி காரணமாக இந்த மளிகை கடைக்கு தீ வைக்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பனந்தாள்;
திருப்பனந்தாள் அருகே மளிகை கடையில் இருந்த ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. தொழில் போட்டி காரணமாக இந்த மளிகை கடைக்கு தீ வைக்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மளிகை கடையில் தீப்பிடித்தது
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே கட்டா நகரம் பெரிய தெருவை சேர்ந்தவர் பழனி (வயது42). இவர் முட்டகுடி அருகே மெயின் ரோட்டில் கடந்த 2 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் இந்த மளிகை கடையில் தீப்பற்றியது. இதில் மளிகை கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், மளிகை பொருட்கள் எரிந்து நாசமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் மளிகை கடையில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
மர்ம நபர்கள் தீ வைத்தனரா
இது குறித்து திருப்பனந்தாள் போலீசில் மளிகை கடைக்காரர் பழனி புகார் அளித்தார். இதில் தொழில் போட்டி காரணமாக யாரோ மர்மநபர்கள் தனது மளிகை கடைக்கு தீ வைத்து உள்ளனர் என கூறியுள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story