நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 2:15 AM IST (Updated: 23 March 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். வள்ளிவேலு, சுரேஷ், வேலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story