கல்லூரி மாணவர் கொலை: கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்


கல்லூரி மாணவர் கொலை: கைதான நண்பர்  பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 23 March 2022 2:18 AM IST (Updated: 23 March 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலையில் கைதான அவரது நண்பர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்

பனவடலிசத்திரம்:
நெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலையில் கைதான அவரது நண்பர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கல்லூரி மாணவர் கொலை
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குட்டி மகன் அசோக் (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். 
இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த அழகுதுரை மகன் மருதுபாண்டி (21). இவர் கேரளாவில் இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு மருதுபாண்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அசோக், மருதுபாண்டி, அவரது நண்பரான சுரண்டையைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சபரிசெல்வம் (21) ஆகியோர் கூவாச்சிபட்டி பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 பேரும் சேர்ந்து அசோக்கை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 
பரபரப்பு வாக்குமூலம்
இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருதுபாண்டி, சபரிசெல்வம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலைக்கான காரணம் குறித்து மருதுபாண்டி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 
அதில், அசோக்கும், நானும் நண்பர்கள். நான் கேரளாவில் எனது உறவினரின் இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், எனது உறவினருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது. அதுதொடர்பாக சம்பவத்தன்று பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் அசோக் எனக்கு ஆதரவாக பேசாமல், சமரசம் செய்து கொள்ளும்படி கூறினார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு சபரிசெல்வத்தை ஏன் அழைத்து வந்தாய் என்று அவரிடம் அவதூறாக பேசினார். இதனால் அசோக் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் நானும், சபரிசெல்வமும், அசோக்கை கத்தியால் குத்திக் கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story