மானூர்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு இறந்தார்
மானூர்:
மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துப்பாண்டி (வயது 32). திருமணமாகாதவர். சுமார் 8 வருடங்களுக்கு முன்பு முருகன் இறந்துவிட்ட நிலையில், முத்துப்பாண்டியின் உடன் பிறந்தவர்களுக்கு திருமணமாகியுள்ளது. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.
இந்நிலையில் முத்துப்பாண்டி, குடும்பச் சொத்துக்களை தன் பெயருக்கு எழுதி தரச்சொல்லி தனது தாயாரை வற்புறுத்தியுள்ளார். தாயார் மறுக்கவே மனமுடைந்த முத்துப்பாண்டி, மானூர் அருகே கரம்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த ஒரு அறையில் உள்பக்கமாக பூட்டி விட்டு சேலையால் தூக்கு போட்டுள்ளார்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story