சுரண்டை அருகே குளத்தில் குதித்து பெண் தற்கொலை
குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்தரர்
சுரண்டை:
சுரண்டை அருகே கரையாளனுர் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சேகர். சலவை தொழிலாளி. இவருடைய மனைவி திரவியம் (வயது 47). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுரண்டை அருகே உள்ள ரெட்டைகுளத்தில் பெண் பிணம் மிதப்பதாக சுரண்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கடன் தொல்லை காரணமாக குளத்தில் குதித்து திரவியம் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story