கடையம்: நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி முதியவர் பலி
நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்
கடையம்:
பாப்பான்குளம் அருகே செல்லப்பிள்ளையார்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் பொன்னுசாமி (வயது 68). இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மடவார்விளாகத்தில் இவருக்கு வயல் உள்ளது. வயலில் நேற்று மாலை அறுவடை ஆகி நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பிவிட்டு இரண்டாவது லோடு ஏற்ற டிராக்டரின் வருகைக்காக காத்திருந்தார். வெயில் அதிகமாக இருந்ததால் இவரும் அறுவடைக்கு வந்த பெண் பணியாளர் ஒருவரும் அறுவடை எந்திரத்தின் பின்னால் உள்ள நிழலில் உட்கார்ந்து இருந்தனர். டிராக்டர் வந்தவுடன் நெல் மூட்டைகள் ஏற்ற டிராக்டருக்கு இடம் கொடுப்பதற்காக நெல் அறுவடை எந்திரம் பின்நோக்கி வந்தது. இதைப்பார்த்த பெண் பணியாளர் வேகமாக எழுந்து சென்றுவிட்டார். பொன்னுசாமி எழுந்து செல்வதற்குள் அறுவடை எந்திரத்தில் பின்புறம் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி இவரது மகன் பசுபதி அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story