‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான கட்டிடம்
அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பி மட்டும் தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பேராபத்து ஏற்படும் முன்பு கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டு்ம்.
அருள், புதுப்பாளையம்
தார்சாலை அமைக்கப்படுமா?
கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் இருந்து 1-வது மாதேஸ்வரன் வீதிக்கு மண் ரோடு பிரிந்து செல்கிறது. அந்த ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது. உடனே அந்த ரோட்டை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
அடிபம்பு பழுது சரிசெய்யப்படுமா?
சென்னிமலை வவ்வால்காடு வீதியில் அடிபம்பு உள்ளது. இதன் மூலம் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது இது பழுதடைந்து உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனே அடிபம்பை சரிசெய்து குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சென்னிமலை.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு சூரம்பட்டி சங்கு நகரில் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்பட்டு் உள்ளது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொதுமக்கள், சூரம்பட்டி.
கழிவுநீர் கால்வாய் வேண்டும்
அந்தியூர் ஒன்றியம் கீழ்வாணி ஊராட்சிக்கு உள்பட்டது இந்திராநகர். இங்குள்ள 4 வீதிகளிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்க குழி தோண்டப்பட்டது. இதில் 3 வீதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் 4-வது வீதியில் கால்வாய் அமைக்கப்படவில்லை. குழியும் மூடப்படவில்லை. இதனால் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த வீதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே 4-வது வீதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து, அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இந்திரா நகர்.
Related Tags :
Next Story