அந்தியூரில் தூக்குப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை


அந்தியூரில் தூக்குப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 23 March 2022 3:21 AM IST (Updated: 23 March 2022 3:21 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் தூக்குப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர்
அந்தியூரில் தூக்குப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
தனியார் நிறுவன ஊழியர்
அந்தியூர் முத்துக்குமாரசாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கோமதி. மகன் சபரி கண்ணன். மகள் சுபிஷா. 
இந்தநிலையில் நேற்று காலை சபரி கண்ணன் தூங்கி எழுந்து பார்த்தபோது, விஜயகுமார் படுக்கை அறையில் உள்ள கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சபரி கண்ணன் அலறி துடித்தார். உடனே இதுபற்றி அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
காரணம் என்ன?
தகவல் கிடைத்ததும், அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். 
விஜயகுமார் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று உடனடியாக தெரியவில்லை. அவருக்கு ஏதாவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டாரா?, கடன் தொல்லையா?, குடும்ப தகராறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
விஜயகுமாரின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. 



Next Story