மத்திய அரசை கண்டித்து சேலத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து சேலத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. மத்திய அரசின் பொருளாதார கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் வருகிற 28 மற்றும் 29-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி தினமும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி சேலம் சீரங்கன்பாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். பின்னர் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story