ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்
சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
சேலம்:
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு சங்க மாவட்ட செயலாளர் ஜான்ஆஸ்டின் தலைமை தாங்கினார். தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் திருவரங்கன் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணினி உதவியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன் முறைப்படுத்த வேண்டும என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
Related Tags :
Next Story