தென்காசி: நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
தென்காசி:
குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தத்து கிராமங்களான கட்டளைக் குடியிருப்பு, கற்குடி, வேம்பநல்லூர், லாலா குடியிருப்பு, கீழப்புதூர் ஆகிய 5 கிராமங்களில் ஒரு வாரம் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதையொட்டி நடந்த கால்நடை மருத்துவ முகாமில் டாக்டர்கள் ஜெயபால் ராஜா, திருநாவுக்கரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கண் மருத்துவ முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். முகாமில் குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் ராஜகுமார் கலந்துகொண்டு சுகாதாரம் குறித்து விளக்கிப் பேசினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகன் ராஜ், ஷியாம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் சுகாதாரம் முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் தனியா மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமின் நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜெய்நிலா சுந்தரி தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் சிறப்புரையாற்றினார். சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி, கற்குடி பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டி, சிவ முகேஷ் வேணு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை ராஜேஸ்வரி, அலுவலக தலைமை கண்காணிப்பாளர் மல்லிகா, கற்குடி பஞ்சாயத்து துணைத்தலைவர் பாக்கியலெட்சுமி, முன்னாள் தலைவர் சேகர், ஆசிரியர் நல்லசிவன், வருவாய் ஆய்வாளர் முத்துகுமார், நூலகர் ராமசாமி, கவுன்சிலர் குத்தாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி வரலாற்று துறை சார்பில் இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. வரலாற்று துறை தலைவர் அமிர்தவல்லி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மத்தியபிரதேச விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மணிக்குமார், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
Related Tags :
Next Story