மின்சார வயரை எலி கடித்ததால் நள்ளிரவில் ஒலித்த வங்கி அலாரம்-சேலத்தில் பரபரப்பு


மின்சார வயரை எலி கடித்ததால் நள்ளிரவில் ஒலித்த வங்கி அலாரம்-சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 March 2022 4:46 AM IST (Updated: 23 March 2022 4:46 AM IST)
t-max-icont-min-icon

மின்சார வயரை எலி கடித்ததால் நள்ளிரவில் வங்கி அலாரம் ஒலித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்:
சேலம் முள்ளுவாடி கேட் அருகே தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கி ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வங்கியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வங்கியில் உள்ள அலாரம் திடீரென்று ஒலித்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வங்கி அலுவலர்களை வரவழைத்து வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நகை, பணம் எதுவும் திருட்டு போகவில்லை. மின்சார வயரை எலி கடித்ததால், எச்சரிக்கை மணி ஒலித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story