மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள். கலெக்டர் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் 357 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 78 மாற்றுத்திறனாளிகளின் பெயர் பதிவும், 110 புதிய பயனாளிகளுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 பேருக்கும், ரூ.20 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர சைக்கிள் 2 பேருக்கும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சீகராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஷியாமளா தீனா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story