ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது


ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 23 March 2022 10:00 AM IST (Updated: 23 March 2022 10:00 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணி அளவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, பட்டு வளர்ச்சி, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். 

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story