நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 March 2022 2:34 PM IST (Updated: 23 March 2022 2:34 PM IST)
t-max-icont-min-icon

ராயபுரத்தில் போலீஸ் நிலையம் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர், 

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் தன்னுடைய காரின் பழுதை சரிசெய்வதற்காக அப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் ஒப்படைத்தார். இதையடுத்து நேற்று பகல் 12 மணியளவில் கடையின் மெக்கானிக் சுப்பிரமணி காரை ராயபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையம் பின்புறம் அர்த்தன் ரோடு சாலை வழியாக ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன்பக்க என்ஜின் பகுதியில் உள்ள பேட்டரியில் இருந்து திடீரென புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த மெக்கானிக் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.

அதைத்தொடர்ந்து, கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராயபுரம் தீயணைப்பு துறை இணை அதிகாரி பரமேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் காரை ஓட்டி வந்த மெக்கானிக் சுப்பிரமணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story