வாணியம்பாடியில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அழிப்பு
வாணியம்பாடியில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில 500 மதுபாட்டில்கள் மற்றும் 1,500 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து வைத்திருந்தனர்.
இந்தநிலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை ஆணையர் பானு உத்தரவின் பேரில், அந்த மது பாட்டில்களை, வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில், போலீசார், லாலா ஏரி பகுதிக்கு கொண்டு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அழித்தனர்.
Related Tags :
Next Story