வாணியம்பாடியில் மாணவ- மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
வாணியம்பாடியில் மாணவ- மாணவிகளுக்கு சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், வாணியம்பாடி டவுன் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பது எவ்வாறு, போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து வாணியம்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். ஆசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story