பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி
பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி
உடுமலை நகராட்சி பகுதியில், வீதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கியது.
பன்றிகள்
உடுமலை நகராட்சிக்குட்பட்ட சிலபகுதிகளில் பன்றிகள் வீதிகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதாரம் கெடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சியில் புகார் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பன்றிகள் நகராட்சி பகுதிக்குள் சுற்றித்திரியக்கூடாது என்று பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளது.ஆனால் பன்றிகள் எப்போதும் போன்று சுற்றித்திரிகின்றன.
பிடிக்கப்பட்டன
இந்த நிலையில் நகராட்சி பகுதியில் வீதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.
இதற்கான நடவடிக்கைகள் நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் உத்திரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் இருந்து வந்திருந்த பணியாளர்கள் பன்றிகளை பிடித்தனர்.வள்ளியம்மாள் காலனி, பழனியாண்டவர்நகர், யு.கே.சி.நகர், டி.ஆர்.என். கார்டன் ஆகிய குடியிருப்பு பகுதிகளில்உள்ள வீதிகளில் சுற்றித்திரிந்த மொத்தம் 12 பன்றிகள் பிடிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பணிகள் தொடரும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story