ஆதித்தனார் கல்லூரி மாணவருக்கு பாராட்டு
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவரை கல்லூரி முதல்வர் பாராட்டினார்
திருச்செந்தூர்:
தூத்துக்குடியில் குளோபல் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் உலக யூனியன் சிலம்ப கூட்டமைப்பு இணைந்து சிலம்பம் உலக சாதனை போட்டியை நடத்தியது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,100 பேர் கலந்துகொண்டனர். இதே நேரத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இப்போட்டி நடைபெற்றது.
அதில் தனித்திறமை போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வேதியியல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர் ச.அய்யப்பன், 3 மணி நேரம் ஒற்றைக்கம்பு மற்றும் 15 நிமிடம் இரட்டைக்கம்பு இடைவிடாமல் சுற்றி குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இவரது சாதனையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், வேதியியல் துறை தலைவர் அன்பரசன், ெபாறுப்பாசிரியர் கவிதா மற்றும் துறை பேராசிரியர்கள் ஜெசிந்த் மிஸ்பா, தீபாராணி, அபுல்கலாம் ஆசாத், கோடிஸ்பதி ஆகியோர் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story