திருமண உதவித்தொகை திட்டத்தை தொடர வேண்டும்
திருமண உதவித்தொகை திட்டத்தை தொடர வேண்டும் என்று திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
செம்பட்டு,மார்ச்.24-
திருமண உதவித்தொகை திட்டத்தை தொடர வேண்டும் என்று திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
விலை உயர்வு
திண்டுக்கல்லில் உள்ள கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது, அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதிக்கும். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. கொரோனா காலகட்டத்தில் பலர் வேலையிழந்து உள்ள நிலையில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
கியாஸ் விலை உயர்வு மக்களை அதிகமாக பாதிக்கும். பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அரசு சுமைகளை மக்கள் மீது சுமத்த கூடாது. மக்களுக்காகத்தான் அரசு உள்ளது.
வெற்றி, தோல்வி சகஜம்
அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி தற்போது ஆட்சியில் இல்லாமல் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம். எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம்.
தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டத்தை தொடர வேண்டும். பெண்களுக்கான திட்டங்களை அரசு நிறுத்தி வைக்கக்கூடாது. ஆளும் கட்சிக்கு ஏற்றமாதிரி திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்தை தொடரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story