தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
அரசின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்,
தமிழக அரசின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையானவர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை தேடும் இளைஞர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலை தேடுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன்; 25.3.22 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக் காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story