வளர்ச்சி திட்ட பணிகள்


வளர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 23 March 2022 6:25 PM IST (Updated: 23 March 2022 6:25 PM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி திட்ட பணிகள்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதி  காங்கேயம் சாலை பெருமாள் கோவில் வீதியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பொது கழிப்பிடம் பராமரிப்பு பணிகள், பெருமாள் புதூரில்
ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள், முத்தூர் வாரச்சந்தையில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 3 கோடியே 6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் நேற்று காலை 10 மணிக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து முத்தூர் கொடுமுடி சாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில், பருப்பு வகைகள் மற்றும் மின்னணு எடை எந்திரத்தின் செயல்பாடு, இருப்பு வைக்கப்பட்டுள்ள மளிகை பொருட்களின் எடை, தரம், மற்றும் காலாவதி தேதி ஆகியவை பற்றி ஆய்வு செய்தார். பின்னர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் பொதுமக்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story