தூத்துக்குடி போலீசாரை வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
தூத்துக்குடி போலீசாரை வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்ணிற்கும், ஹலோ போலீஸ் எண்ணிற்கும் கடந்த 6-ந்தேதி 2 செல்போன் எண்களில் இருந்து போலீசாரை ஆபாசாமாக திட்டியும், தமிழ்நாடு போலீஸ் சின்னத்தில் உள்ள தேசியகொடி மற்றும் அசோக சக்கரத்தில் ஆபாச படத்தை வைத்து சித்தரித்தும், போலீஸ் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டியும் மாவட்ட போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தொடர்ந்து தகவல் வந்தது. இதுகுறித்து முதல் நிலை காவலர் ராஜலிங்கம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மிரட்டல் வாட்ஸ்அப் செய்தி அனுப்பி வந்தவர், தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் (வயது31) என தெரியவந்தது. இவர் ஏற்கனவே, இதே போன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரை உட்பட 4 மாவட்ட கட்டுபாட்டு அறை வாட்ஸ்அப் எண்களுக்கு போலீசாரை ஆபாசமாக திட்டி செய்தி அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து சைபர் குற்ற பிரிவு போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story