கோத்தகிரியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்


கோத்தகிரியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 9:45 PM IST (Updated: 23 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். 

பண்ணாரி மாரியம்மன் கோவில்

கோத்தகிரி கடை வீதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 

அத்துடன்  பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி  காலை 10 மணிக்கு அபிஷேக பூஜையும், 12 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது.

தேரோட்டம்

இதில் பக்தர்கள் தேர் வடம் இழுக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் காம்பாய் கடை, பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், கடைவீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். 

திருவீதிஉலா நிகழ்ச்சி

தொடர்ந்து வியாழக்கிழமை அம்மன் குதிரை வாகனத்திலும்,  வெள்ளிக் கிழமை சிம்ம வாகனத்திலும், 26-ந் தேதி அம்மன் புலி வாகனத்திலும் வீற்றிருந்து திரு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

வருகிற 28-ந்  தேதி மஞ்சள் நீராடல் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.


Next Story