ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் குற்ற சம்பவங்களை தடுக்க 2 கண்காணிப்பு கோபுரங்கள்
ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் குற்ற சம்பவங்களை தடுக்க 2 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 18-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 21-ந் தேதி முதல் தினமும் ஒவ்வொரு சமூகம், உபயதாரர்கள், அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதையொட்டி தினமும் தேர் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். தேர்த்திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, நகை பறித்தல் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க 2 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மரக்கட்டைகளை கொண்டு ஏணி அமைத்து, கண்காணிப்பு கோபுரங்கள் லோயர் பஜார் சாலை, மாரியம்மன் கோவில் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு போலீசார் பணியில் ஈடுபட்டு தேர் திருவிழா நடைபெறுவதையும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட உள்ளனர்.
வருகிற 19-ந் தேதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story