கோத்தகிரியில் சாலையோரத்தில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக கோத்தகிரியில் சாலையோரத்தில் ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
கோத்தகிரி
கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக கோத்தகிரியில் சாலையோரத்தில் ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
ஜெகரண்டா மரங்கள்
நீலகிரி மலை மாவட்டம் என்பதால் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள், செடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் காணப்படுகிறது. இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின் போது, பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை மலர் செடிகள் கொண்டு வந்து நடவு செய்தனர்.
இதில், சாலையோரங்களில் வளர்க்கப்படும் அழகு மரங்களில் ஒன்றாக கருதப்படும் ஜெகரண்டா மரங்களும் உள்ளன. இவ்வகை மரங்களில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் மரம் முழுக்க நீல நிறத்தில் பூக்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்கும்.
பூத்து குலுங்குகிறது
இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களிலும், தேயிலை தோட்டங்களின் நடுவிலும் வளர்க்கப்பட்டு உள்ள ஜெகரண்டா மரங்களில் லர்கள் பூத்து குலுங்கி வருகின்றன. அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதுடன், அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதை மகிழ்ச்சியுடன் ரசித்து செல்கிறார்கள். அத்துடன் அந்த மரங்கள் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பியும் எடுத்து மகிழ்கிறார்கள்.
புகைப்படம்
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, இதுபோன்ற மலர்களை சினிமாக்களில்தான் பார்த்து உள்ளோம். தற்போது கோத்தகிரியில் பூத்து குலுங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதை பார்க்கும்போது வெளிநாட்டில் உள்ளதுபோன்று இருப்பதால் அனைவரும் புகைப்படம் எடுத்து செல்கிறார்கள். இதுபோன்ற மரங்கள் அதிகமாக வைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.
Related Tags :
Next Story