மக்கள் விரும்பி வரும் வகையில் அரசு பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் மேம்படுத்த வேண்டும்
மக்கள் விரும்பி வரும் வகையில் அரசு பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.
காரைக்கால், மார்ச்.23-
மக்கள் விரும்பி வரும் வகையில் அரசு பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி, மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.
இந்த கூட்டத்தில், அமைச்சர் சந்திரபிரியங்கா, நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விரும்பி வரும்...
காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அரசு பொது மருத்துவமனைக்கான தேவைகள், கொரோனா 4-வது அலை வந்தால் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள், பள்ளிகளில் உள்ள வசதிகள், சாலை, ரெயில்வே திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தேன். சில திட்டங்களை விரைவுப்படுத்த அறிவுறுத்தியுள்ளேன்.
அரசு பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் மக்கள் விரும்பி வரும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். கவர்னர் என்ற முறையில், எந்தெந்த வகையில் நிதி பெற்றுத்தர முடியுமோ, திட்டங்களை மேம்படுத்த முடியுமோ அதற்கேற்ற வகையில் செயல்படுகிறேன்.
புறக்கணிக்கவில்லை
காரைக்கால் பிராந்தியம் புறக்கணிக்கப்படுவதாக சிலர் கூறியுள்ளனர். அதுபோன்ற புறக்கணிப்பு எதுவும் இல்லை. கொரோனா பரவல் காலத்தில் கூட இங்கு நேரடியாக வந்து அரசு பொதுமருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்துள்ளேன். சில சமயங்களில் நேரடியாக வரவில்லை என்றாலும் காணொலிக்காட்சி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
___
Related Tags :
Next Story