திருமணம் நிச்சயமான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் நிச்சயமான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 March 2022 10:26 PM IST (Updated: 23 March 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே கடன் தொல்லையால் திருமணம் நிச்சயமான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை:
புதுக்கடை அருகே கடன் தொல்லையால் திருமணம் நிச்சயமான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீசில் கூறியதாவது:-
 வாலிபர்
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் லாலு(வயது 28), கட்டிட தொழிலாளி. லாலுவின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர்.  லாலு முன்சிறை பகுதியில் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காப்புக்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் லாலுவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. 
தற்கொலை
இந்தநிலையில் வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாமல் லாலு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீடு கட்ட கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். இதனால், கடந்த சில நாட்களாக லாலு மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்
இதனால் நேற்றுமுன்தினம் லாலு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story