‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
நிலக்கோட்டையில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-ஆனந்த், நிலக்கோட்டை.
தெருவில் ஓடும் கழிவுநீர்
பழனி அருகே மானூர் மேற்கு தெருவில் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. அந்த பகுதியில் அங்கன்வாடி மையம் இருப்பதால், குழந்தைகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே கழிவுநீர் தெருவில் செல்வதை தடுத்து, கால்வாயில் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அறிவாசான், மானூர்.
தெருவிளக்கு வசதி தேவை
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் தேனி செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும்.
-நாகஜோதி, சருத்துப்பட்டி.
பேட்டரி கார் வசதி
திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் வருகின்றனர். இவர்கள் நடைமேடைக்கு செல்வதற்கு சக்கர நாற்காலிகள் மட்டுமே உள்ளன. இதற்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே பேட்டரி கார் வசதி செய்து தரவேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
வேடசந்தூர் தாலுகா எரியோட்டில் மேல்நிலைப்பள்ளி அருகே புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையில் வேகத்தடை அமைக்கவில்லை. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால், மாணவர்கள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே வேகத்தடை அமைக்க வேண்டும்.
-கார்த்திக், எரியோடு.
சேதம் அடைந்த சாலை
பழனி நகராட்சி 27-வது வார்டு அடிவாரம் பகுதியில் ஒரு தெருவில் பேவர்பிளாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டது. தற்போது கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. இரவில் நடந்து செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஸ்ரீசதீஷ், பழனி.
Related Tags :
Next Story