நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்


நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 10:44 PM IST (Updated: 23 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் நில அளவையர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். நில அளவைத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 

புற ஆதார, ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட வேண்டும். ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் நந்தகுமார், பொருளாளர் செந்தில்குமார், இணை செயலாளர் தங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story