ஆதிதிராவிடர் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை
விழுப்புரம் நகரில் ஆதிதிராவிடர் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் பெரியகாலனி, வழுதரெட்டி காலனி, இந்திரா நகர் காலனி பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு குடிசை மாற்று வாரிய அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியினர் பலமுறை போராட்டங்களை நடத்தியதோடு இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் நேற்று விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய நகர்ப்புற வாழ்வாதார வளர்ச்சி திட்ட அலுவலக அதிகாரிகள், இந்திய குடியரசு கட்சியினரை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினர். அப்போது விழுப்புரம் பெரியகாலனி, வழுதரெட்டி காலனி, இந்திரா நகர் காலனி பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அப்போது இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் இருவேல்பட்டு அ.குமார், விழுப்புரம் நகர தலைவர் சிலம்பரசன், நகர கவுரவ தலைவர் சேவகன், ஒன்றிய தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story