காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி


காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி
x
தினத்தந்தி 23 March 2022 10:52 PM IST (Updated: 23 March 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி நடைபெற்றது.

விழுப்புரம், 

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட காசநோய் பிரிவு சார்பில் காசநோய் பற்றியும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) டாக்டர் சுதாகர் தலைமை தாங்கி காசநோய் உருவாகும் விதம், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், காசநோய் இல்லாத இந்தியா, தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் விளக்கமாக பேசினார்.

 இதில் மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் டாக்டர் நேதாஜி, நலக்கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், சசிக்குமார், ரீச் அரசு சாரா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Next Story