அவதூறு பரப்பி வரும் அ தி மு க கவுன்சிலர் மீது வழக்கு தொடருவேன் கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பேட்டி
அவதூறு பரப்பி வரும் அ தி மு க கவுன்சிலர் மீது வழக்கு தொடருவேன் கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பேட்டி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் சுப்ராயலு நிருபர்களிடம் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி நகராட்சியில் கடந்த 18-ந் தேதி டெண்டர் விடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. டெண்டரை ஒத்தி வைக்க நகராட்சி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலையில் நான் ஊழல் செய்துவிட்டதாக அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆதாரமற்ற முறையில் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்த அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது நகராட்சி துணை தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story