கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா


கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா
x

கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா

திருவெண்காடு;
சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் இங்கு எழுந்தருளி திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி ரங்கநாத பெருமாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் மேளதாளம் முழங்க பக்தர்களால் தெப்பத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், ஊராட்சி தலைவர் சுந்தரராஜன், வேடுபறி உற்சவ கமிட்டி செயலாளர் ரகுநாதன், சீர்காழி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story