கொல்லிமலையில் வனத்துறை அனுமதியின்றி தொடங்கிய தடுப்பு சுவர் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்


கொல்லிமலையில் வனத்துறை அனுமதியின்றி தொடங்கிய தடுப்பு சுவர் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 23 March 2022 11:18 PM IST (Updated: 23 March 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் வனத்துறை அனுமதியின்றி தொடங்கிய தடுப்பு சுவர் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

சேந்தமங்கலம்:
தடுப்பு சுவர் அமைக்கும் பணி
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி மற்றும் கர்நாடகா, கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் சுற்றுலா வந்து செல்கிறார்கள். வனப்பகுதியை அதிகமாக கொண்ட கொல்லிமலை தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அடிவாரப்பகுதியான காரவள்ளியில் இருந்து கொல்லிமலைக்கு 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். சாலையோர தடுப்பு சுவர்கள் பழுதடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தடுத்து நிறுத்தம்
அதன்படி நேற்று கொல்லிமலை சாலை 9-வது கொண்டை ஊசி வளைவில் பழுதடைந்த பழைய தடுப்பு சுவரை அகற்றிவிட்டு, புதிய தடுப்பு சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் பழைய தடுப்பு சுவரை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு வந்த வனக்காப்பாளர்கள் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் தடுப்பு சுவர் அமைக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அனுமதி பெறாமல் தடுப்பு சுவர் அமைக்ககூடாது என்று தெரிவித்தனர். இதனால் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Next Story