காவேரிப்பட்டணம் அருகே பால் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி


காவேரிப்பட்டணம் அருகே பால் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
x

காவேரிப்பட்டணம் அருகே பால் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை இறந்தது.

காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பந்தேரி அடுத்த சாப்பர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது ஒரு வயது பெண் குழந்தை மேகவர்ஷினி நேற்று காலை  வீட்டு அருகில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது தனியார் நிறுவனத்திற்கு பால் ஏற்றும் வேன் குழந்தை மீது மோதியது. இந்த விபத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story