சிங்காரப்பேட்டை வனப்பகுதியில் கேளை ஆட்டை வேட்டையாடியவர் கைது
சிங்காரப்பேட்டை வனப்பகுதியில் கேளை ஆட்டை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை வனத்துறையினர் எக்கூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 2 பேர் கேளை ஆட்டை வேட்டையாடி எடுத்து வந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் எக்கூர் சாமாட்சி கொட்டாயை சேர்ந்த சண்முகம் (வயது 55) என்பதும், தப்பியோடியவர் திருப்பத்தூர் மாவட்டம் நெல்லிவாசல் அருகே உள்ள மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் (45) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சண்முகத்தை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து கேளை ஆடு, கம்பிச்சுருள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சாம்பசிவத்தை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story