கிருஷ்ணகிரி அருகே ஸ்டூடியோ கடைக்காரர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு


கிருஷ்ணகிரி அருகே  ஸ்டூடியோ கடைக்காரர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 23 March 2022 11:20 PM IST (Updated: 23 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே ஸ்டூடியோ கடைக்காரர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு போனது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி, வேலன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது37). இவர் மகாராஜகடையில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் வேலை விஷயமாக கடந்த 21-ந் தேதி வெளியூர் சென்றுள்ளார்.  இதனால் இவரது மனைவி ஷாலினி வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தார். பின்னர் இவர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஷாலினி மகாராஜகடை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story