உத்தனப்பள்ளி அருகே கேபிள் வயர் திருடிய வியாபாரி கைது


உத்தனப்பள்ளி அருகே கேபிள் வயர் திருடிய வியாபாரி கைது
x
தினத்தந்தி 23 March 2022 11:20 PM IST (Updated: 23 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே கேபிள் வயர் திருடிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ் (வயது 40.) இவரது நிலத்தில் இருந்த 100 மீட்டர் மின்மோட்டார் கேபிள் வயரை மர்ம நபர் திருடி சென்றார். இது தொடர்பாக கோவிந்தராஜ் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராயக்கோட்டை பாஞ்சாலி நகர் கோட்டை தெருவை சேர்ந்த வியாபாரியான சந்தோஷ் (33,) என்பவர் வயரை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கேபிள் வயரை பறிமுதல் செய்தனர்.

Next Story