கிணற்றில் பிணமாக கிடந்த என்ஜினீயரிங் மாணவர்
நெமிலி அருகே என்ஜினீரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
நெமிலி
நெமிலி அருகே என்ஜினீரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
என்ஜினீயரிங் மாணவர்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சிறுணமல்லி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அப்பு என்கிற விக்னேஷ் (வயது 22). இவர் காஞ்சீபுரம் அருகே கீழம்பியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய அவர் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த விக்னேஷின் தந்தை மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் சிறுணமல்லியிலிருந்து மானாமதுரை செல்லும் சாலையில் சம்பத் என்பவரது கிணற்றின் அருகே விக்னேஷ் பயன்படுத்திய செல்போன், கண்ணாடி மற்றும் செருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கண்டனர்.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் விக்னேஷ் கிணற்றில் தவறி விழுந்துதிருகலாம் என கருதி கிணற்றில் தேட ஆரம்பித்தனர்.
பிணமாக மீட்பு
மேலும் நெமிலி போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் விக்னேஷை தேடத்தொடங்கினர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு விக்னேஷ் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விக்னேஷின் தந்தை ஏழுமலை நெமிலி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story