பென்னாகரம் அருகே திருமணமான 6 நாளில் நகை பணத்துடன் புதுப்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்


பென்னாகரம் அருகே திருமணமான 6 நாளில் நகை பணத்துடன் புதுப்பெண் மாயம் தந்தை போலீசில் புகார்
x
தினத்தந்தி 23 March 2022 11:22 PM IST (Updated: 23 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே திருமணமான 6 நாளில் நகை, பணத்துடன் புதுப்பெண் மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது22). இவருக்கும், கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவிக்கும் கடந்த 16-ந் தேதி அளேபுரம் நரசிம்மர் சாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது. புதுப்ெபண் கணவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற புதுப்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது புதுப்பெண் அணிந்து இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரத்துடன் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக மாணவியின் தந்தை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story