பென்னாகரம் அருகே 5ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் தலைமை ஆசிரியர் கைது
பென்னாகரம் அருகே 5-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே 5-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவியிடம் சில்மிஷம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். பாப்பாரப்பட்டி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முத்துசாமி (வயது 53) அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவியிடம் மதுபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
தலைமை ஆசிரியர் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் முத்துசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story