மது விற்ற 3 பேர் கைது
மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நொய்யல்,
நொய்யல் அருகே மரவாபாளையத்தில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மது விற்று கொண்டிருந்த மரவாபாளையம் பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 52), மூலிமங்கலம் பிரிவு டாஸ்மாக் கடை பின்புறம் மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் குமாரசாமி செட்டியார் தெருவை சேர்ந்த ராஜாராம் (40), அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மது விற்று கொண்டிருந்த கிழக்கு தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story