நெகமத்தில் அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் 1000 மூட்டை கொப்பரை கொள்முதல்
நெகமத்தில் அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் 1000 மூட்டை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
நெகமம்
தமிழகம் முழுவதும் 42 கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம், 51 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் செஞ்சேரிமலை, நெகமம் ஆகிய 2 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
இதனால், கொப்பரை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக அரசு ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல் தொடங்கியது. இந்த நிலையில் நெகமத்தில் அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரைகள் கொள்முதல் கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற கொப்பரை கொள்முதலில் 40 விவசாயிகள், 1000 மூட்டை கொப்பரைகளுடன் வந்து விற்பனை செய்து பயனடைந்தனர். அரசின் விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.105.90-க்கு விவசாயிகள் இடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.53 லட்சம் ஆகும். இதில் வேளாண்மை அலுவலர் சூர்யா, உதவி வேளாண்மை அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். எனவே விவசாயிகள் தங்களது நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து கொப்பரை விற்பனைக்கு பதிவு செய்து கொண்டு பயன்பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்த தகவலை தகவலை விறபனைக்கூட கண்காணிப்பாளர் வாணி தெரிவித்தார்.
Related Tags :
Next Story