கால்நடை செயற்கை முறை கருவூட்டாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த பயிற்சி அளிக்க வேண்டும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கால்நடை செயற்கை முறை  கருவூட்டாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த பயிற்சி அளிக்க வேண்டும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 March 2022 11:23 PM IST (Updated: 23 March 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை செயற்கை முறை கருவூட்டாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஒகேனக்கல்லில் நடந்த சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,:
தமிழ்நாடு மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஒகேனக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் மதியழகன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். மாநில துணை செயலாளர்கள் சையத்உசேன், காமராஜ், மாநில துணைத்தலைவர்கள் சண்முகசுந்தரம், சரவணன், மோகனரங்கன், அன்பழகன், அருள், ரமேஷ், முருகன், மாநில ஆலோசனைக்குழு தலைவர்கள் பழனியப்பன், சொக்கலிங்கம் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர்.
தமிழகம் முழுவதும் பணிபுரியும் கால்நடை செயற்கை முறை கருவூட்டாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த பயிற்சி அளிக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க மாவட்ட பொருளாளர் நஞ்சுண்டன், துணை தலைவர் ஆதித்தன், துணை செயலாளர் காமராஜ் உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story