நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 March 2022 11:25 PM IST (Updated: 23 March 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 
கரூர் மாவட்ட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணி, செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊழியர் விரோத போக்கை கடைப்பிடிக்கும் உயர் அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவல் பணி அடிப்படையில் திட்ட பணியை மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு மலைப்படி மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். 10-ம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையிலேயே நில அளவர் பணி நியமனத்தை தொடர்ந்திட வேண்டும், நில அளவை துறையை சி.எல்.ஏ.வுடன் இணைக்கும் ஆலோசனையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று, நாளை என 2 நாட்களும் நடக்கிறது. 

Next Story