சிவகங்கையில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சிவகங்கையில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 11:30 PM IST (Updated: 23 March 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சிவகங்கை, 
தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென 9 ஆசிரியர் இயக்கங்கள் அடங்கிய இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பினர் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளருமான நாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் இளமாறன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் திப்புசுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

Next Story