சாலையை கடந்து சென்றபோது பஸ் மோதி மாணவன் பலி


சாலையை கடந்து சென்றபோது பஸ் மோதி மாணவன் பலி
x
தினத்தந்தி 23 March 2022 11:30 PM IST (Updated: 23 March 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

சாலையை கடந்து சென்றபோது பஸ் மோதி மாணவன் உயிரிழந்தான்

சிவகங்கை, 
சிவகங்கை அடுத்த கண்டனியை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் விஜின் (வயது6). இந்த சிறுவன் வாணியங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்துவந்தான்.நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து பள்ளி வேனில் கண்டனியில் உள்ள வீட்டிற்கு சென்றார். வேனை கண்டனியில் ரோடு ஓரத்தில் நிறுத்தி மாணவன் இறக்கி விடப்பட்டான். பின்னர் விஜின் ரோட்டை கடந்து செல்ல முயன்றான். அப்போது மானாமதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி வந்த டவுன் பஸ்  விஜின் மீது மோதியது . இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மாணவனின் உறவினர்கள் நேற்று இரவு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Next Story