அரசு பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி காயம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 March 2022 11:42 PM IST (Updated: 23 March 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி மூதாட்டி காயம் அடைந்தார்.

கிருஷ்ணராயபுரம், 
லாலாபேட்டை அருகே உள்ள மகாதானபுரத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 80). இவர் கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக நாகம்மாள் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாகம்மாளின் மகன் ராஜலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story